தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

2012-ம் ஆண்டு பருவ கால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்கத்தினர் திருச்சியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக திருச்சி மண்டல மேலாளர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மண்டலத் தலைவர் வேலு தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், 2012-ம் ஆண்டு பருவகால பணியாளர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர் ஆணையரின் (சமரசம்) உத்தரவின்படி இண்டேன் எரிவாயு பிரிவு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

கிடங்குகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்கள், கணினிப் பிரிவு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

கிடங்குகளில் பணியாற்றும் சுமைப் பணி தொழிலாளர்களுக்கு எப்சிஐ-க்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் கந்தர்வகோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ என்.சின்னதுரை பேசும்போது, ‘‘3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதுபோல, தொழிலாளர்களுக்கு எதிராக 44 சட்டங்களை ஒருங்கிணைத்து 4 சட்டங்களாக மத்திய அரசு கொண்டு வருவதை எதிர்த்தும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’’ என்றார்.

ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் புவனேஸ்வரன், சிஐடியு திருச்சி மாவட்டச் செயலாளர் ரங்கராஜன், மண்டலச் செயலாளர் ராசப்பன், மண்டல பொருளாளர் கருணாகரன், சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்