நெல்லை- தென்காசி 4 வழிச்சாலையில் - சுங்க கட்டணம் வசூலிப்பது குறித்து அரசு விளக்கம் :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி- தென்காசி இடையிலான நான்கு வழிச் சாலை பணிகள் முழுமையாக முடிந்த பின்னரே சுங்க கட்டணம் வசூலிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று, உங்கள் தொகுதியில் முதல்வர் பிரிவுக்கு அனுப்பிய மனுவுக்கு அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர்.

திருநெல்வேலி- தென்காசி இடையே நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின் றன. இச்சாலையில் மாறாந்தை அருகே சுங்கச்சாவடி அமைக்கப் படும் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத் திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா, ‘உங்கள் தொகுதி யில் முதல்வர்’ பிரிவுக்கு அனுப்பியுள்ள மனுவில், தென்காசி- திருநெல்வேலி நான்கு வழிச்சாலை பணியானது உலக வங்கி நிதி மற்றும் தமிழக அரசின் நிதி பங்களிப்புடன் செயல் படுத்தப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி இந்த நெடுஞ்சாலையில் மாறாந்தையில் அமைக்கப்பட இருக்கும் சுங்கச்சாவடி திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து பதிலளித்த தென்காசி கோட்ட பொறியாளர் முருகன், “ திருநெல்வேலி - செங்கோட்டை மாநில நெடுஞ்சாலை எண் 39-ல் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி சுங்கச்சாவடி அமைக்கப்படும். நான்கு வழிச் சாலை பணியானது முழுமையாக முடிவடைந்தபின் சுங்க கட்டணம் வசூலிப்பது தொடர்பாக முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்