திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி உட்பட 11 நகரங்களில் புறவழிச்சாலை அமைக்கப் பட உள்ளது என பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரி வித்தார்.
திருவண்ணாமலை வட்ட நெடுஞ்சாலைத் துறை (கட்டு மானம் மற்றும் பராமரிப்பு) அலுவலகம் திறப்பு விழா தி.மலையில் நேற்று நடைபெற்றது. நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் தீரஜ் குமார் தலைமை வகித்தார். துணை சபாநாயகர் பிச்சாண்டி முன்னிலை வகித்தார். சென்னை கண்காணிப்பு பொறியாளர் செந்தில் வரவேற்றார். வட்ட அலுவலகத்தை திறந்து வைத்து பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசும்போது, “தமிழகத்தில் உள்ள 10 ஆயிரம் கி.மீ., கிராம சாலைகளை தரம் உயர்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு நெடுஞ்சாலைத் துறை மூலமாக கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.
திண்டிவனம் – திருவண்ணா மலை - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை கடந்த 1998-ம் ஆண்டும் மற்றும் வேலூர் – திருவண்ணாமலை – விழுப்புரம் நெடுஞ்சாலை கடந்த 2009-ம் ஆண்டு முதலமைச்சராக கருணாநிதி இருந்தபோதுதான் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது. இப்போது, தி.மலை – கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலையை தேசிய நெடுஞ் சாலையாக தரம் உயர்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். தேசிய நெடுஞ்சாலை யாக தரம் உயர்த்தப்படும்போது, அந்த சாலையில் உள்ள நகர மற்றும் பேரூராட்சி பகுதியில் புறவழிச் சாலை அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள நகரம் மற்றும் பேரூராட்சி பகுதிகள் கணக்கெடுக் கப்படுகிறது.
தி.மலை வட்ட நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் எல்லைக்கு உட்பட்ட சேத்துப்பட்டு, மருதாடு, வந்தவாசி, கீழ்பென்னாத்தூர், செங்கம், செஞ்சி, குடி யாத்தம், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணா மலை மற்றும் போளூர் ஆகிய 11 நகரங்களுக்கு புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணா மலை மற்றும் போளூரில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி விரைவாக பயன்பாட்டு கொண்டு வரப்படும்.
திருவண்ணாமலை நகரில் அவலூர்பேட்டை சாலையில், இந்தாண்டு ரயில்வே மேம்பாலம் கட்டப்படும். மேலும், வேட்டவலம் சாலையில் அடுத்தாண்டு ரயில்வே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக் கப்படும். தி.மலையில் 10 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் மற்றும் அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் கான்கிரீட் சாலை அமைக்கப்படும்.
இப்போது நெடுஞ்சாலைத் துறைக்கு நிலம் கையகப் படுத்துவதை தடுத்து நிறுத்த முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிலம் எடுப்பதில் காலதாமதம் இல்லாமல் ஆட்சியர் உதவிட வேண்டும். எனவே, சாலை அமைக்கும் பணியை கண்காணிக்கவே, மைய பகுதியான திருவண்ணாமலையில் வட்ட கண்காணிப்பாளர் அலுவ லகம் திறக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த தாரர்கள், சாலைகளை தரமாக போட வேண்டும் என தமிழக அரசு கருதுகிறது” என்றார்.
இதில், ஆட்சியர் பா.முருகேஷ், நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநர் குமார், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கிரி, அம்பேத்குமார், ஜோதி, சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில், கோட்ட பொறியாளர் முரளி நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago