டாஸ்மாக் மதுபானக்கடைகள் உள்ளே மற்றும் வெளி பகுதியில் கண்காணிப்பு கேமராவை பொருத்த வேண்டும் என ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் உத்தர விட்டுள்ளார்.
தி.மலை மாவட்டம் ஆரணியில் நேற்று டாஸ்மாக் மதுபானக்கடை மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, காவல் ஆய்வாளர் கோகுல் ராஜன் முன்னிலை வகித்தார். ஆரணி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் தலைமை வகித்துப் பேசும்போது, “ஒவ்வொரு டாஸ் மாக் மதுபானக் கடைகள் உள்ளே மற்றும் வெளியே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். விற்பனை அதிகம் உள்ள தினங்களில், பணத்தை வெளியே கொண்டு செல்வதற்கு முன்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். டாஸ்மாக் கடையில் பணத்தை வைத்துவிட்டு செல்லும்போது, இரவு நேர காவலர் ஒருவரை நியமித்து பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டும், டாஸ்மாக் மதுபானக் கடையில் பணிபுரியும் அனைத்து ஊழியர் களும், காவல்துறை மூலம் உருவாக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் குழுவில் இணைந்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
இதில், ஆரணி நகரம், களம்பூர், கண்ணமங்கலம், சந்தவாசல் ஆகிய பகுதிகளில் உள்ள30-க்கும் மேற்பட்ட டாஸ்மாக்மதுபானக்கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago