உதகையில் தெரு நாய்களுக்கு : ‘ரேபிஸ்’ தடுப்பூசி செலுத்தும் பணி :

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டம் அருவங்காட்டில் இயங்கி வரும் சர்வதேச கால்நடை சேவை அமைப்பு சார்பில் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்துவது, கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவது வழக்கம். தற்போது உதகை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருநாய்களுக்கு ‘ரேபிஸ்’ தடுப்பூசி போடும் பணிகளில் கால்நடை சேவை அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். அந்த அமைப்பினர் கூறும்போது, ‘‘நாய்களுக்கு ‘ரேபிஸ்’ நோய் 100 சதவீதம் தவிர்க்கக்கூடிய நோயாகும். நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினால் மனிதர்களுக்கு இந்நோய் பரவுவதை தடுக்கலாம். வரும் 2030-ம் ஆண்டுக்குள் ரேபிஸ் நோயால் மனித உயிரிழப்புகளை தடுப்பதே உலக சுகாதார மையத்தின் நோக்கம். ஆண்டுதோறும் முறையாக நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினால் இதுசாத்தியம். நாய்களை வளர்ப்பவர்கள், ஆண்டுதோறும் அவரவர் நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி போடுவதை வழக்கமாகக்கொள்ள வேண்டும். இதுகுறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்