போச்சம்பள்ளி அருகே ரூ.30 கோடி மதிப்பில் - அனந்த பெருமாள் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரம் :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த ஜம்புகுட்டப்பட்டியில் ரூ.30 கோடி மதிப்பில்  அனந்த பெருமாள் கோயில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியை சந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய்குமார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் செய்து வருகின்றனர். அனந்த பெருமாள் சிலை வடிவமைக்கும் பணி மகாபலிபுரத்தில் நடை பெற்றது.

இப்பணிகள் நிறைவடைந் ததைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காலை மகாபலிபுரத்தில் மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில், துர்காஸ்டாலின் பங்கேற்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட மூலவருக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர்.

பின்னர் இரவு 7 மணியளவில் சந்தூர் கிராமத்துக்கு வந்த பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. சந்தூரில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் போச்சம்பள்ளி வழியாக கோயிலுக்கு இரவு 10 மணிக்கு வந்தடைந்தது. அங்கு வாணவேடிக்கைகள் வெடித்தும், மலர்கள் தூவியும் மூலவர் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டார்.

இந்நிகழ்வில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன், பர்கூர் எம்எல்ஏ மதியழகன், திமுக பிரமுகர் கே.வி.எஸ்.சீனிவாசன், ஓசூர் முன்னாள் நகர் மன்ற தலைவர் மாதேஸ்வரன், முன்னாள் ஒன்றியச் செயலாளர் அரியப்பன், சாந்தி, வழக்கறிஞர் சம்பத்குமார், ராஜ்குமார், அருண் பத்மநாபன், போச்சம்பள்ளி எஸ்கேபி தேவன், கணேசன், சாந்தமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கோயில் திருப்பணிகள் 9 மாதங்களுக்குள் நிறைவடைந்து மகா கும்பாபிஷேக நடைபெறும் என நிர்வாகிகள் தெரிவித்தனர். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்