பெண் குழந்தைகளின் பாதுகாப் பான வாழ்க்கை நலனுக்காக செல்வ மகள் சேமிப்புத் திட் டத்தை தொடங்கவேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது:
"செல்வ மகள் சேமிப்புத் திட்டம்” இந்திய அஞ்சல் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 2 வயது முதல் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு குறைந்த பட்சம் ரூ.250 செலுத்தி கணக்கினை தொடங்கலாம். கணக்கு தொடங்கப்பட்ட நாளிலிருந்து 15 வருடம்வரை இக்கணக்கில் தொகை யினை செலுத்தி வரவு வைக்க லாம். கணக்கில் உள்ள இருப்பு வைப்பு தொகையிலிருந்து 50%உயர்கல்விக்காக (10ம் வகுப்புமுடித்தபின் அல்லது 18 வயதுபூர்த்தியான பின்) பெற்றுக் கொள்ளலாம். இக்கணக்கின் முதிர்வு தொகையினை, கணக்குதொடங்கி 21 வருடம் நிறை வடைந்த பிறகோ அல்லது அப்பெண்குழந்தையின் திருமணம் இவற்றில் எது முதலில் வருகிறதோ அன்று பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு" www.indiapost.gov.in" என்ற இணைய தளத்தை காணலாம் என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago