விழுப்புரம் மாவட்டத்தில் மழைநீர் வடிகால் மாபெரும் தூய்மைப்பணி தொடக்கம் : வரும் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் மாபெ ரும் தூய்மைப்பணியை மாவட்ட ஆட்சியர் நேற்று தொடக்கி வைத்தார்.

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட கீழ்ப்பெரும்பாக்கம், இ.பி காலனி, தாமரை குளம், கே.கே.ரோடு மற்றும் திருச்சி ரோடு ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் வாய்க்கால் தூர்வாரும் பணியினை ஆட்சியர் மோகன் நேற்று தொடக்கி வைத்தார். அப்போ அவர் கூறியது:

விழுப்புரம் மாவட்டத்திற் குட்பட்ட நகராட்சிகள், பேரூராட்சி கள் மற்றும் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று தொடங்கி வரும் 25-ம் தேதி வரை கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால்கள் தூய்மைப்படுத்தும் பணி நடைபெறுகிறது.

வடிகால் படிவுகளை அகற்று வதற்கு பொக்லைன், ஜெட் ராடிங் இயந்திரம், ஜெசிபி உள்ளிட்ட இயந்திரங்கள் இல்லாத உள்ளாட்சிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு நலச் சங்கங்கள் மூலமாகவும் ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

பணியாளர்கள் கையுறை, முகக்கவசம், காலுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும்.

பாதாள சாக்கடை மூடிகளை திறந்த பின்னர் 10 நிமிடம் கழித்து விஷவாயு தாக்காதவாறு பாதுகாப்பு கவசத்துடனும் முன் னெச்சரிக்கையுடனும் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

இத்திட்டத்தினை முழுமையாக 6 நாட்களுக்குள் செயல்படுத்தி வேண்டும் என்றார்.

முன்னெச்சரிக்கையுடனும் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்