முதுகுளத்தூர் அருகே - தரமற்ற முறையில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணி நிறுத்தி வைப்பு :

By செய்திப்பிரிவு

முதுகுளத்தூர் அருகே ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெற்ற கூடுதல் கட்டிட கட்டுமானப் பணி தரமற்ற வகையில் மேற்கொள்ளப்படுவதாக கிராம மக்கள் புகார் கூறினர். இதையடுத்து கட்டுமானப் பணியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

முதுகுளத்தூர் அருகே மேலச்சிறுபோது கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.60 லட்சம் மதிப் பில் கூடுதலாக மகப்பேறு சிகிச் சைக்கான கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது.

கட்டுமானப்பணிகள் அனைத்தும் தரமற்ற முறையில் நடைபெறுவதாக கிராம மக்கள் ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலாவிடம் புகார் மனு அளித்தனர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்த சுகாதாரத்துறை, பொதுப்பணித் துறையினருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

பொதுப்பணித் துறை அதிகா ரிகள் நடத்திய விசாரணையில், கட்டுமானப் பணிகள் தரமற்றதாக இருந்தது கண்டறியப்பட்டது. சுவரில் கையால் உரசினாலே சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழு ந்தன. இதையடுத்து கட்டுமானப் பணியை நிறுத்துமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறு கையில், கட்டுமானப் பணி களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம். தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். இது தொடர்பாக உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்