தேவகோட்டை அருகே கூட்டுறவு சங்கத்தில் - பயிர்க்கடன் வழங்கியதில் பல லட்சம் முறைகேடு :

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், தேவ கோட்டை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பயிர்க்கடன் வழங்கியதில் பல லட்ச ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக துணைத் தலை வர் மற்றும் விவசாயிகள் சங் கத்தை முற்றுகையிட்டு புகார் தெரிவித்துள்ளனர்.

தேவகோட்டை அருகே கிளா மலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தேர்போகி, கிளாமலை, மாணிக்க னேந்தல், சாத்தமங்கலம், கொடிக்காடு, களத்தூர், பாப் பாகுடி உள்ளிட்ட 20-க்கும் மேற் பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அதன் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த பெரி.நாரா யணன் உள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு 2021 ஜன.31 வரை நிலுவையில் உள்ள பயிர்க்கடனை அரசு தள்ளுபடி செய்தது. இதில் கிளாமலை தொடக்க வேளாண் மைக் கூட்டுறவு சங்கத்தில் 2018-19, 2019-20, 2020-21 ஆண்டு களில் 299 விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மொத்தம் ரூ.1.94 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் தள்ளுபடி பட்டி யலை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் சிலர் பெயரில் பெற்ற கடனை விட, கூடுதலான தொகை தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து சங்கத் துணைத் தலைவர் உ.நாராயணன் தலை மையில் விவசாயிகள் சிலர் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து விவசாயி கருப் பையா கூறுகையில், எனது மனைவி சிட்டு பெயரில் 2018-19-ம் ஆண்டு ரூ.10 ஆயிரம் கடன் பெற்றேன். ஆனால் எனது மனைவி பெயரில் ரூ.40 ஆயிரம் கடன் பெறப்பட்டுள்ளது. தொடர்ந்து எனது கடனை புதுப் பித்து வந்துள்ளனர். ஆனால் 3 ஆண்டுகளில் மொத்தமே ரூ.10 ஆயிரம்தான் வாங்கியுள்ளேன்.

ஆனால் தள்ளுபடி செய்ததோ ரூ.40 ஆயிரத்துக்கு மேல் உள்ளது. இதுகுறித்து கேட்டால் முறையான பதில் இல்லை. என்னை போல் பலரிடமும் முறைகேடு செய்து ள்ளனர். இதுகுறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

இதுகுறித்து சங்கத் தலைவர் பெரி.நாராயணன் கூறுகையில், ‘முறைகேடு நடக்க வாய்ப்பில்லை. என் மீது பகை உணர்வில் பொய் புகார் தெரிவிக்கின்றனர்,’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE