100 கவிஞர்கள் பங்கேற்ற மகாகவி பாரதி பாமாலை :

திருநெல்வேலி: திருநெல்வேலி டவுன் லிட்டில் பிளவர் மேல்நிலைப்பள்ளியில் மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு பாரதியார் உலக பொதுச் சேவை நிதியத்தின் சார்பில் “பாரதிக்கு பாமாலை” எனும் மாநில அளவிலான கவிதை வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 100 கவிஞர்கள் மரபு, புதுக்கவிதையாக 16 வரிகளில் பாரதிக்கு புகழ் மாலை சூட்டினர். நிறைவு விழாவுக்கு பாரதியார் உலக பொதுச்சேவை நிதிய தலைவர் அ.மரியசூசை தலைமை வகித்தார்.

பொதுச் செயலாளர் கோ. கணபதி சுப்பிரமணியன் வரவேற்றார். பாரதி பாடல்களை சந்திரபுஷ்பம் பிரபு பாடினார். திருநெல்வேலி மக்கள் நீதி மன்ற மாவட்ட நீதிபதி சமீனா, மாநகர காவல்துறை துணை ஆணையர் டி.பி சுரேஷ்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு 100 கவிஞர்களுக்கு விருது, சான்றிதழ் வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்ட கவிதைகள் புத்தகமாக வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் பாப்பாகுடி இரா செல்வமணி நன்றி கூறினார். எழுத்தாளர் மு.வெ.ரா தொகுத்து வழங்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE