செஞ்சி மற்றும் மயிலத்தில் நேற்று முன்தினம் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்த 2 பெண்கள் உயிரிழந்தனர்.
செஞ்சி ஊராட்சி ஒன்றியத்துக்குட் பட்ட அகலூர் கிராம ஏரியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ்மண் வெட்டியெடுக்கும் பணி நடைபெற்றது. இதில் அதே ஊரைச் சேர்ந்த சாமி நாதன் மனைவி வசந்தா(58) என்பவர் வேலை செய்து கொண் டிருந்தார். அப்போது, திடீரென மயங்கி விழுந்தார். அவரை அருகி லிருந்தவர்கள் மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற னர். அவருக்கு வாயில் நுரை தள் ளிய நிலையில் மருத்துவர்கள் அவரைபரிசோதித்த போது, அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
வேலை செய்யும் இடத்தில் பாம்பு தீண்டியிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகித்ததால், அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதேபோன்று மயிலம் ஒன்றியத் தில் எடையாளம் கிராமத்தில் நடைபெற்ற தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலைசெய்து கொண்டிருந்த கண்ணாயிரம் மனைவி குயிலி (60) திடீரென மயங்கி விழுந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மயிலம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago