நெல்லை, தென்காசியில் பரவலாக மழை :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நேற்று பகலில் வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில், மாலையிலும், இரவிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் களக்காட்டில் 52.40 மி.மீ., கொடுமுடியாறு அணையில் 50 மி.மீ., நாங்குநேரியில் 20 மி.மீ., திருநெல்வேலியில் 5.60 மி.மீ., பாளையங்கோட்டையில் 2 மி.மீ. மழை பதிவானது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 837 கனஅடி நீர் வந்தது. 883 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

நீர்மட்டம் 81 அடியாக இருந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 91.04 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 62.83 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 16.65 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 10.69 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 2 அடியாகவும் இருந்தது.

இதேபோல, தென்காசியில் 29.60 மி.மீ., ஆய்க்குடியில் 8 மி.மீ., சிவகிரியில் 4 மி.மீ. மழை பதிவானது. சுரண்டை, பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளிலும் இரவில் மழை பெய்தது.

கடனாநதி அணை நீர்மட்டம் 66.40 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 65.50 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 56.11 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 124 அடியாகவும் இருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE