உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் - கணினி முறையில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்வு : ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள் ளாட்சித் தேர்தலில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி பதிவு அலுவலர்கள் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்ற உள்ள 11,496 வாக்குச்சாவடி பதிவு அலுவலர்கள், துணை அலுவலர் களுக்கான முதற்கட்ட பயிற்சி மையம் மற்றும் கால அட்டவணை, பணியாளர்கள் ஒதுக்கீடு கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் முறையை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது, அவர் பேசும்போது, ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, மாவட்டம் முழுவதும் 1,410 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர் நிலை 1 முதல் நிலை 6 வரை பணிகள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன. இதில், ஆண், பெண் இருபாலருக்கும் பணிகள் ஒதுக் கப்பட்டுள்ளன. அதன்படி, வாலாஜா ஒன்றியத்துக்கு 1,887 அலுவலர்களும், சோளிங்கர் ஒன்றியத்துக்கு 1,608 அலுவலர்களும், அரக்கோணம் ஒன்றியத்துக்கு 1,872 அலுவலர்களும், நெமிலி ஒன்றியத்துக்கு 1,720 அலுவலர்களும், காவேரிப்பாக்கம் ஒன்றியத்துக்கு 1,003 அலுவலர்களும், ஆற்காடு ஒன்றியத்துக்கு 1,526 அலுவலர்களும், திமிரி ஒன்றியத்துக்கு 1,880 அலுவலர்களும் என மொத்தம் 11,496 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.

இதைத்தொடர்ந்து, வாக்குச்சாவடி பதிவு அலுவலர்களுக்கான பணி பயிற்சி மற்றும் மையம் குறித்த முதற் கட்ட கணினி குலுக்கல் முறையை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் நேற்று தொடங்கி வைத்தார். இந்த தேர்வானது, வரும் 24-ம் தேதி வரை முதற்கட்ட பயிற்சிகள் நடைபெறும் வட்டாரங்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் லோகநாயகி, உள்ளாட்சித் தேர்தல் நேர்முக உதவியாளர் மரியம்ரெஜினா, உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE