புதுச்சேரியில் புதிதாக 128 பேருக்கு கரோனா தொற்று : மேலும் ஒருவர் உயிரிழப்பு

புதுச்சேரியில் புதிதாக 128 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் சிகிச்சை பல னின்றி உயிரிழந்துள்ளார்.

இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் நேற்று வெளியிட்ட தகவல்:

புதுச்சேரி மாநிலத்தில் 5,004 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 88, காரைக்காலில் 32, மாஹேவில் 8 என மொத்தம் 128 பேருக்கு (2.56 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏனாமில் புதிதாக யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை. மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்து 384 ஆக அதிகரித்துள் ளது.

இதில் தற்போது மருத்துவ மனைகளில் 169 பேரும், வீடு களில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 755 பேரும் என 924 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரி கொம் பாக்கத்தைச் சேர்ந்த 75 வயது முதியவர் தொற்று பாதிக் கப்பட்டு சிகிச்சை பலனின்றிஉயிரிழந்தார்.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,829 ஆகவும், இறப்பு விகி தம் 1.46 சதவீதமாகவும் அதிகரித் துள்ளது.

புதிதாக 122 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இத னால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 631 (97.80 சதவீதம்) ஆக உயர்ந் துள்ளது.

மாநிலத்தில் இதுவரை 8 லட்சத்து 97 ஆயிரத்து 261 பேருக்கு (2-வது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE