புனரமைக்கப்பட்ட விழுப்புரத்தான் கால்வாய் : திட்டப் பணியை ஆய்வு செய்த ஆட்சியர்

விழுப்புரம் புறவழிச்சாலை திட்டத் தினால் கடந்த 2003-ம் ஆண்டு கோலியனூர் ஒன்றியம் நன்னாடு, விராட்டிக்குப்பம் ஊராட்சியில் அமைந்துள்ள விழுப்புரத்தான் கால்வாய் மூடப்பட்டது. அதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் கால் வாயினை புனரமைத்து பயன்பாட்டுகொண்டுவர வேண்டும் என ஆட்சி யரிடம் கோரிக்கை வைத்தனர்.

அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியரின் சீரிய முயற் சிகளாலும் மற்றும் அப்பகுதி பொது மக்கள், இளைஞர்கள், ரோட்டரி சங்கம், சேம்பர் ஆப் காமர்ஸ், விழுப்புரம் கட்டிட பொறியாளர்கள் சங்கம், தொழிலதிபர்கள், சமூகஆர்வலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர்க ளின் முழு பங்களிப்போடு கடந்த 28.08.2021 அன்று விழுப்புரத்தான் கால்வாய் புனரமைப்பு பணிகளை ஆட்சியர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மொத்தம் 3.5 கி.மீட்டர் விழுப்புரத்தான் கால்வாய் புனரமைப்பு பணிகள் விழுப்புரம் புறவழிச்சாலை வரை திட்டமிட்டபடி நிறைவுபெற்றது.

முடிவுற்ற பணியினை மாவட்ட ஆட்சியர் த.மோகன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், வருவாய் கோட்டாட்சியர் அரிதாஸ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அன்பரசன், நஹாய் திட்ட மேலாளர், வருவாய் வட்டாட்சியர் வெங்கடசுப்பிரமணி, கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE