மதுரை காம்பளக்ஸ் பஸ் நிலையம் இருந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த பஸ் நிலையம் இருந்த இடம் காணாமல் போனதால் கூடுதலாக 1,100 பஸ்களை நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மதுரையில் தனியார் நகரப் பேருந்து களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதனால் தமிழகத்திலேயே மதுரையில்தான் அதிகமான மாநகர அரசு பேருந்துகள் இயக் கப்படுகின்றன.
மதுரையில் காம்ப்ளக்ஸ் பஸ் நிலையம், பெரியார் பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம் ஆகிய மூன்று பஸ் நிலையங்கள் முழுக்க முழுக்க மாநகர அரசு பேருந்து நிலையங்களாகச் செயல்பட்டன.
மொத்தம் 900 மாநகர பஸ்கள், 4,500 டிரிப் இயக்கப்படுகின்றன. இதில், காம்ப் ளக்ஸ் பேருந்து நிலையத்தில் இருந்து 1,600 டிரிப்புகளும், பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து 2,900 டிரிப்புகளும் இயக்கப்பட்டன.
காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையத்தில் இருந்து திருமங்கலம், திருப்பரங்குன்றம், நிலையூர், திருநகர், திருப்புவனம் வழியே செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து மாநக அரசு பஸ்கள் மட்டுமின்றி, தனியார் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டன.
அதனால் மீனாட்சி அம்மன், திருப்பரங் குன்றம் முருகன் கோயில்களுக்குச் செல்லும் பக்தர்கள் காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையம் வந்துதான் செல்ல வேண்டும். அதனால் இந்த பேருந்து நிலையத்தை தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ப யணிகள் பயன்படுத்தினர்.
1970-களில் பெரியார் மற்றும் காம்ப் ளக்ஸ் பேருந்து நிலையங்களில் இருந்து மாநகர பேருந்துகள் மட்டுமின்றி தென் மாவட்டங்களுக்குச் செல்லும் புறநகர் பஸ்களும் இயக்கப்பட்டன. அதன் பிறகே ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையங்கள் புறநகர் பேருந்துகளுக்காகத் தொடங்கப்பட்டன.
தற்போது காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையத்தையும், பெரியார் பேருந்து நிலையத்தையும் இடித்து விட்டு, அங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையம் போல் ரூ.167 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி நடக்கிறது.
மெஜஸ்டிக் பேருந்து நிலையம் போல் அமைத்தால் கூடுதலாக வணிக வளாகங்கள் கட்ட முடியாது என்ற நோக்கத்தில் தற்போது சாதாரண பேருந்து நிலையமாகவே கட்டப் பட்டுள்ளது.
இதில் காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையம் இருந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்படுகிறது. அதனால் காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையம் இருந்த இடம் தெரி யாமல் போய்விட்டது.
அதேநேரம் பழைய பெரியார் பேருந்து நிலையம் இருந்த இடத்திலாவது புதிய பேருந்து நிலையத்தை விரிவாகக் கட்டியி ருக்க வேண்டும். ஆனால், 900 பேருந்துகள் வந்து செல்லக்கூடிய பேருந்து நிலையத்தில் வெறும் 57 பேருந்துகளை மட்டுமே நிறுத் தக்கூடிய அளவு புதிய பெரியார் பேருந்து நிலையம் கட்டி திறக்கப்பட உள்ளது.
அதனால், பெரியார் பேருந்து நிலையம் செயல்படத் தொடங்கினால் அப்பகுதியில் வழக்கத்தைவிட கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago