ஈரோடு சோலாரில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி 3 வாரத்தில் நிறைவு பெறும், என மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்தார்.
ஈரோடு பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.40 கோடி மதிப்பில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஈரோடு சோலாரில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறியதாவது:
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு பேருந்து நிலையம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. சோலாரில் முதல்கட்டமாக தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் மார்க்கமாக வரும் 40-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இந்த தற்காலிக பேருந்து நிலையத்தில் நிற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தற்போது இதற்கான பணி தொடங்கியுள்ளது. பேருந்து நிற்கும் வகையில் இட வசதி செய்து கொடுப்பது, பயணிகளுக்கு கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, கடைகள், சைக்கிள் ஸ்டாண்ட், ஆட்டோ ஸ்டாண்ட், வெயிட்டிங் ஹால் ஆகியவை அமைக்கப்பட உள்ளது. மூன்று வாரத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி முடிவடையும், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago