கோபி மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாரான நிலையில் 40 ஏக்கர் பரப்பளவில் இருந்த கரும்பு முற்றிலுமாக சேதமடைந்தது.
கோபி மற்றும் அதைச் சுற்றியுள்ள பொலவக்காளிபாளையம், கங்கம்பாளையம், கடுக்காம்பாளையம், நாதிபாளையம், கரட்டூர், தாசம்பாளையம், ஒத்த குதிரை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலும் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் கொட்டித் தீர்த்த கனமழையால் கங்கம்பாளையம், கடுக்காம்பாளையம் உள்ளிட்ட பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பு பயிர் முற்றிலும் காற்றில் சாய்ந்து சேதமடைந்தது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ஒரு வருட கால பயிரான கரும்பு ஓரிரு வார காலத்தில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு பெய்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழைக்கு ரூ.பல லட்சம் மதிப்பிலான கரும்பு பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், என்றனர்.
படம் உள்ளது.
கோபி பகுதியில் பெய்த கனமழையால் 40 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த கரும்பு முற்றிலும் சேதம் அடைந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago