தெருநாய்கள் கடித்து குதறியதால் திருப்பூரில் சிறுவன் படுகாயம் :

திருப்பூரில் தெருநாய்கள் கடித்து குதறியதில் படுகாயமடைந்த 6 வயது சிறுவன், மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.

திருப்பூர் - தாராபுரம் சாலைதெற்குதோட்டம் சங்கிலிப்பள்ளத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி பிரியா. இவர்களது மகன், பிரகதீஸ் (6). வள்ளலார் நகர் தாய்த்தமிழ்ப் பள்ளியில்2-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, தனது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந் பிரகதீஸை, அங்கு வந்த சுமார் 5 தெருநாய்கள் கடித்து குதறின. அங்கிருந்தவர்கள் நாயை விரட்டி, படுகாயமடைந்த சிறுவனை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் குழுவினர், சிறுவனுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது ‘‘திருப்பூர் மாநகர் பகுதிகளில் தெருநாய்கள் அதிகமாக உள்ளன. தெருவில் விளையாடும் சிறுவர்கள், வாகனங்களில் செல்பவர்கள் என அனைவரையும் துரத்திச்சென்று கடிக்கின்றன.

இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பலர் கீழே விழுந்து காயமடைந் துள்ளனர். தெற்கு தோட்டம் சங்கிலிப்பள்ளம், வெள்ளியங் காடு, குப்பாண்டம்பாளையம், கோவில்வழி உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இவற்றை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

திருப்பூர் மாநகராட்சி நலஅலுவலர் பிரதீப் கிருஷ்ணகுமார் கூறும்போது ‘‘திருப்பூர் தெற்கு தோட்டம் பகுதியில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்