பஞ்சமி நிலங்களை மீட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தரக்கோரி மனு :

By செய்திப்பிரிவு

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பஞ்சமி நிலங்களையும், ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களையும் மீட்டு தர வேண்டும் என கிருஷ்ணகிரி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தலித் விடுதலை இயக்க மாநில தலைவர் கருப்பையா, பொது செயலாளர் சசிக்குமார் மற்றும் பொதுமக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டியை நேற்று சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அம் மனுவில் கூறியிருப்பதாவது:

மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலங்களிலும், நில உச்ச வரம்பு நிலங்களிலும் தனி நபர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். இந்த நிலங்களை மீட்டு மீண்டும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும்.

அதே போல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல இடங்களில் பஞ்சமி நிலங்கள் தனி நபர் ஆக்கிரமிப்பில் உள்ளன.

இது விதிமீறல் ஆகும். நில உச்ச வரம்பு சட்டத்தில் எடுக்கப்பட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கிய நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஊத்தங்கரை வட்டம் திருவனப்பட்டியில் பயனாளி ஒருவருக்கு அளிக்கப்பட்ட நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. உரிய விசாரணை நடத்தி, உரிய பயனாளியிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும்.

அதே போல தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பஞ்சமி நிலங்களையும், ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களையும் மீட்டு உரிய பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்