விக்கிரவாண்டி அருகே அரும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். கொத்தனாரான இவர்அதே கிராமத்தில் வீட்டுமனையை கிரையம் பெற்றார். இம்மனையை பட்டா மாற்றம் செய்யும் முன் மனைகளை அளந்து, உட்பிரிவு செய்யவேண்டி விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித் தார். விக்கிரவாண்டி பகுதி சர்வேயரான தேவி (48) கருணாகரனிடம் வீட்டுமனையை அளவீடு செய்ய ரூ. 7 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இப்பணத்தை விழுப்புரம், பாலாஜிநகரில் உள்ள தனது இல்லத்தில் கொடுக்கவேண்டும் என்று தேவி கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்கவிரும்பாத கருணாகரன் விழுப்புரம்லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார்செய்தார். இதனை தொடர்ந்துபோலீஸாரின் அறிவுரைப்படிநேற்று பிற்பகல் கருணாகரன் தேவி யின் இல்லத்திற்கு சென்று லஞ்சப்பணம் ரூ. 7 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி தேவநாதன் தலைமையிலான போலீஸார் தேவி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அவரது கணவர் வெற்றிவேல் ஆகியோரை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago