திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள 2-ம் கட்ட கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்து பேசும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற முதல் கட்ட சிறப்பு முகாமில் 1,04,325 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 52 சதவீத மக்கள், கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண் டனர்.
மாவட்டத்தில் உள்ள அனை வரும் தடுப்பூசியை செலுத்திக் கொண்டு 100 சதவீத இலக்கை அடையவும், 100 சதவீதம் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக திகழ வேண்டும். அனைவரது ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே, இப்பணியை சிறப்பாகவும், வெற்றி கரமாகவும் செயல்படுத்த முடியும். மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முயற்சியில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி, கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப், சுகாதாரத் துறை துணை இயக்குநர்கள் மருத்துவர் செல்வ குமார் (திருவண்ணாமலை), பிரியா ராஜ் (செய்யாறு), மகளிர் திட்ட இயக்குநர் சந்திரா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago