அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி - உள்ளாட்சி தேர்தலை இடையூறு இல்லாமல் நடத்த வேண்டும் : அதிகாரிகளுக்கு திருப்பத்தூர் ஆட்சியர் அமர் குஷ்வாஹா அறிவுரை

By செய்திப்பிரிவு

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உள்ளாட்சி தேர்தலை இடையூறு இல்லாமல் நடத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அறிவுறுத்தி உள்ளார்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரும்,மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான அமர் குஷ்வாஹா தலைமை வகித்து பேசும்போது, "ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. 2 கட்டங்களாக நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதற் கட்டமாக திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, கந்திலி மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய 4 ஒன்றியங்களுக்கும் அக்டோபர் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இதில், 9 மாவட்ட கவுன்சிலர் பதவி, 83 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கும், 137 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கும், 1,188 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் வாக்குச்சீட்டு முறையில் நேரடி தேர்தல் நடைபெற உள்ளது. மாதனூர் மற்றும் ஆலங்காயம் ஒன்றியத்துக்கு 2-ம் கட்ட தேர்தல் அக்டோபர் 9-ம் தேதி நடைபெற உள்ளது.

இதில், 4 மாவட்ட கவுன்சிலர்கள் பதவிகளுக்கும், 42 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கும், 71 கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கும், 591 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் வாக்குச்சீட்டு அடிப்படையில் தேர்தல் நடக்கிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட் டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறை (ஸ்டாங் ரூம்), வாக்கு எண்ணிக்கை மையம், தேர்தல் தொடர்பான பயிற்சிகள், தேர்தலுக்கான வாக்கு செலுத்தும் 4 வகையான சீட்டுகள், தபால் வாக்கு சீட்டுகள், தேர்தல் பார்வை யாளர்கள், தேர்தல் செலவினங்கள், போக்குவரத்து வசதி, செய்தி மற்றும் தகவல் பரிமாற்றம், தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள், கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர் கள் அனைவரும் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை சரியாக செய்ய வேண்டும்.

அனைத்து அரசு துறை அலு வலர்களும் உள்ளட்சித் தேர்தலில் பணியாற்ற வேண்டும். தேர்தல் விதிமுறைகளை கடைபிடித்து, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தலை எந்தவித இடையூறும் இல்லாமல், அமைதியான முறையில் நடத்த அனைத்து துறை அலுவலர்களும் பணியாற்ற வேண்டும்’’ என்றார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன், சார் ஆட்சியர் அலர் மேல்மங்கை, திட்ட இயக்குநர் செல்வராசு, ஆட்சியரின் நேர்முகஉதவியாளர் (பொது), வில்சன்ராஜசேகர், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செந்தில், அனைத்து வட்டாட்சியர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்