கொல்லிமலை பழங்குடியின மாணவர்களுக்கு - டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடக்கம் :

By செய்திப்பிரிவு

கொல்லிமலை வட்டாரத்திலுள்ள பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்கு டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை (18-ம் தேதி) தொடங்குகிறது.

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக, பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன.

இவ்வட்டத்தின் சார்பில் கொல்லிமலை வட்டாரத்திலுள்ள பழங்குடியின மாணவ, மாணவியருக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் -2 மற்றும் குரூப் - 4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி, ஜிடிஆர் மேல்நிலைப்பள்ளியில், நாளை (18-ம் தேதி) தொடங்குகிறது.

வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறுகளில் தொடர்ந்து நடக்கவுள்ள இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர் நாளை காலை 11 மணிக்கு நேரில் வந்து பதிவு மேற்கொள்ளலாம்.

மேலும்,http://tamilnaducareerservice.tn.gov.in என்ற இணையதளத்தில், காணொலி வழி கற்றல், மாதிரி தேர்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

தேர்வர்கள் தங்களது விவரங்களை இந்த இணையத்தில் பதிவு செய்து, எந்த போட்டித்தேர்வில் பங்கேற்கின்றனர் என்பதையும் குறிப்பிட வேண்டும். குறிப்பிட்ட தேர்வுக்கான பாடக் குறிப்புகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாணவர்கள் பதிவிறக்கம் செய்யலாம். மாணவர்கள், மாதிரிதேர்வினை ஆன்லைனில் எழுதவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்