நாமக்கல் மாவட்டத்தில் நடப்பாண்டில், 66 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குழந்தைத் திருமணங்கள் நடைபெறாமல் தடுப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் நடைபெறாமல் தடுக்க பள்ளி ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் தங்கள் பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
ஆசிரியைகள் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவியர்களுக்கு, குழந்தைத் திருமணம் நடைபெறுவது குறித்து தெரியவந்தால், உடனடி யாக சைல்டு லைன், இலவச தொலைபேசி எண்ணுக்கு (1098) அல்லது பெண்களுக்கான இலவச தொலைபேசி எண்ணுக்கு (181) தெரியப்படுத்த வேண்டும்.
நாமக்கல் மாவட்டத் தில் நடப்பு ஆண்டில் 66 குழந்தைத் திரு மணங்கள் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளன. குழந்தைத் திருமணங் களுக்கு ஏற்பாடு செய்த பெற்றோர்கள் உள் ளிட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன, என்றார்.
கூட்டத்தில், சுகாதாரத் துறை இணை இயக்குநர் ராஜ்மோகன், துணை இயக்குநர் பிரபாகரன், மாவட்ட சமூக நல அலுவலர் கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago