கடலூர் மீன்பிடி துறைமுகம் ரூ.100 கோடியில் விரிவாக்கம் : பணியின் திறன் குறித்து ஆட்சியர் ஆய்வு

By செய்திப்பிரிவு

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, ரூ. 100 கோடியில் நடைபெற்று வரும் கடலூர் முதுநகர் மீன்பிடி துறைமுகத்தை விரிவுபடுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர் முதுநகர் மீன்பிடி துறைமுகத்தில் படகு தளம், தடுப்புச் சுவருடன் கூடிய சிறிய படகு தளம், இரு ஏலக்கூடங்கள் ,4 வலைப்பின்னும் கூடங்கள், அலுவலக கட்டிடம், கழிப்பறை கட்டிடம், 30ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி, அணுகு சாலை வசதி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், படகு பழுது பார்க்கும் இடம் மற்றும் தூர்வாரும் பணிகள் உள்ளிட்ட நவீனபடுத்தும் பணிகள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகின்றன. இப்பணிகள் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 24-ம்தேதி தொடங்கப்பட்டது. இந்த மீன்பிடித் துறைமுகத்தை நவீனப்படுத்துவதன் மூலம் 300 இயந்திர விசைப்படகுகள் மற்றும் 1,100 நாட்டு படகுகள் நிறுத்த இடவசதிகள் ஏற்படும். இதனால் மீன்பிடி தொழில் வளம்பெற்று மீனவர்களின் வருமானம் அதிகரிக்கும்.

கரோனா காரணமாக தொய்வடைந்த பணிகள் தற்போதுமீண்டும் நடக்கத் தொடங்கியிருக்கிறது. மீன் பிடித் துறைமுகத்தை நவீனப்படுத்தும் பணியை நேரில் பார்வையிட்ட கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், குறிப்பிட்ட காலகெடுவிற்குள் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆட்சியர்ஆய்வின் போது உதவிசெயற்பொறியாளர்(மீன்பிடி துறைமுக திட்ட கோட்டம்) திருவருள், துணை இயக்குநர் (மீன்வளத்துறை) வேல்முருகன், உதவி இயக்குநர்கள்(மீன்வளத்துறை) தமிழ்மாறன்,குமரேசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்