பைனான்சியர் கொலைக்கு பழிவாங்க - பாளை.யில் இளைஞர் கொலை :

By செய்திப்பிரிவு

பாளையங்கோட்டை சாந்திநகர் காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த மக்தூம் மகன் அப்துல் காதர். மிலிட்டரி கேன்டீன் அருகே தனது நண்பர் களுடன் நேற்று முன்தினம் இரவில் இவர் மது அருந்தியபோது, மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கும்பல் அப்துல்காதரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது.

இந்த கொலையில் தொடர்புடைய வர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.தனிப்படையினர் நடத்திய விசாரணையில் சாத்தான்குளத்தை சேர்ந்த பைனான்சியர் மார்ட்டின் (45) என்பவர் கடந்த ஜூன் 10-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரில் 7-வது எதிரியாக அப்துல்காதர் சேர்க்கப்பட்டிருந்தார். பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அப்துல்காதர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இந்நிலையில் பழிக்குப்பழியாக அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கொலை நடைபெற்ற பகுதிகளுக்கு தென்மண்டல ஐ.ஜி. அன்பு நேற்று சென்று விசாரணை மேற்கொண்டார்.

கோபாலசமுத்திரம் பகுதிக்கு சென்று மக்களை சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘திருநெல்வேலி மாவட்டத்தில் பதற்றத்தை தடுக்க 1,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்