வெப்பச் சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தி.மலை மாவட்டத்தின் தெற்கு பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு கன மழை பெய்தது.
இதில், கீழ்பென்னாத்தூர் பகுதியில் 102.4 மி.மீ., மழை பெய்துள்ளது. மேலும் கலசப்பாக்கம் 77.6, தண்டராம்பட்டு 74.6, தி.மலை 41, சேத்துப்பட்டு 39.6, போளூரில் 15.8 மி.மீ., மழை பெய்துள்ளது.
மேலும், செங்கம் 4.6 மற்றும் செய்யாறு பகுதியில் 5 மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி சராசரியாக 30 மி.மீ., மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள் ளது.
மேலும், சாத்தனூர் அணை பகுதியில் 10.2 மி.மீ., மழை பெய்துள்ளது. 119 அடி உயரம் உள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டம், 83.40 அடியாக உள்ளது. அணையில் 1,801 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. 60 அடி உயரம் உள்ள குப்பநத்தம் அணையின் நீர்மட்டம் 41.33 அடியாகவும், 62.32 அடி உயரம் உள்ள செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 50.68 அடியாக உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago