திட்டக்குடி அருகிலுள்ள செவ்வேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை (22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 10 ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்துக் கொள்வதாக கூறி நெருங்கிப் பழகி, பாலியல் செயல்பாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 12-04-2019 அன்று வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திக் கொண்டு சிதம்பரம் அருகிலுள்ள கொத்தட்டை கிராமத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கிருந்து சிறுமியை சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சின்ன துரை மற்றும் கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டதாக கூறி அவரது நண்பர்கள் 4 பேரை போலீஸார் கைது செய்து சிறுமியை மீட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை கடலூரில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி எழிலரசி நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சின்ன துரைக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண் டனை விதித்து தீர்ப்பளித்தார். நண்பர்கள் 4 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாநில அரசின் ஏதேனும் ஒரு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago