தேனி மாவட்டத்தில் கதிர்நரசி ங்காபுரம் கிராம ஊராட்சித் தலைவர், பிச்சம்பட்டி, ராஜதானி, ராமகிருஷ்ணாபுரம், அழகர்நாயக்கன்பட்டி, வடபுதுப்பட்டி, போ.நாகலாபுரம் ஆகிய கிராம ஊராட்சி வார்டுகள், ஆண்டிபட்டி ஒன்றியம் 19-வது வார்டு, க.மயிலாடும்பாறை ஒன்றியம் 8-வது வார்டு உறுப் பினர் பதவியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த 9 பதவியிடங்களுக்கான தேர்தல் வரும் அக்.9-ம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனுக்கள் வரும் 22-ம் தேதி வரை பெறப்படும். சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி, ஒன்றிய அலுவலகங்களில் மனு தாக்கல் செய்யலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் க.வீ.முரளீதரன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago