திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி டீசல் விலையை குறைக்க வேண்டும் : லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை

By செய்திப்பிரிவு

நாமக்கல்லில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயற்குழு கூட்டம் நடைபெற்றது. சம்மேளனத் தலைவர் எம்.ஆர்.குமாரசாமி தலைமை வகித்துப் பேசினார்.மாநில செயலாளர் வாங்கிலி,பொருளாளர் தன்ராஜ் மற்றும்நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திமுக தேர்தல் அறிக்கையில் டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்பதாக கூறியுள்ள நிலையில் விலை குறைப்பு இதுவரை செய்யவில்லை. விரைந்து விலைக் குறைப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழகத்திலுள்ள 48 சுங்கச்சாவடிகளில் தேவையற்ற 32 சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருப்பதை வரவேற்கிறோம்.

லாரிகளில் லோடு ஏற்றி இறக்கும் கூலித் தொகை மற்றும் தபால் அனுப்பும் தொகை உள்ளிட்டவற்றை புக்கிங் ஏஜெண்ட்டுகள் கொடுத்து வந்த நிலையில் இனி அந்த தொகை சரக்கு உரிமையாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனை வெளிமாநில சரக்கு உரிமையாளர்களும் பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்