திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் கருத்துக் கேட்புக் கூட்டம் நாளை (செப்.17) நடைபெற இருந்தது.
இதில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் சா.பீட்டர் அல்போன்ஸ், துணைத் தலைவர் மஸ்தான் மற்றும் ஆணையக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க இருந்தனர். தற்போது சில மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக இந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago