மறைந்த முதல்வர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள அவரது சிலைகளுக்கு நேற்று திமுக, அதிமுக உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
அண்ணாவின் 113-வது பிறந்த நாளையொட்டி, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே சிந்தாமணியிலுள்ள அவரது சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன், நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், கவிஞர் சல்மா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மத்திய, வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் க.வைரமணி தலைமையில் மாநகரச் செயலாளர் மு.அன்பழகன், எம்எல்ஏ ஸ்டாலின்குமார், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் தலைமையில் புள்ளம்பாடியிலுள்ள அண்ணா சிலைக்கும், மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில் சிந்தாமணியிலுள்ள அண்ணா சிலைக்கும், வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்சோதி தலைமையில் அல்லித்துறையிலுள்ள அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு (மாநகர்), சேரன் (புறநகர் வடக்கு), மணவை தமிழ்மாணிக்கம்(புறநகர் தெற்கு), மாநில மகளிரணி செயலாளர் ரொஹையா, திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் ஆரோக்கியராஜ், தேமுதிக சார்பில் மாநகர் மாவட்டச் செயலாளர் டி.வி.கணேஷ், அமமுக சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் சிந்தாமணியிலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். இதேபோல, மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அண்ணா சிலைகளுக்கு திமுக, அதிமுக, தேமுதிக, தி.க, மதிமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago