திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய விழாவான ஆவணி மூலத்திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆண்டு தோறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம், திருநெல் வேலி அருகே மானூரில் நடத்தப் படும். இதற்காக நெல்லையப்பர் கோயிலில் இருந்து மானூருக்கு சுவாமிகள் எழுந்தருள்வர்.
இவ்வாண்டு கரோனா ஊரடங்கு காரணமாக கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் நேற்று கோயிலுக்குள் உள்திருவிழாவாக நடத்தப்பட்டது.
இதையொட்டி காலை 6.30 மணிக்கு திருக்கோயில் பெரிய பிரகாரத்தில் மேலகோபுர வாசலில் சுவாமி நெல்லையப்பர் கருவூர் சித்தருக்கு காட்சி கொடு த்தார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், கோயிலுக்கு வெளியே நின்று பக்தர்கள் வழிபட்டுச் சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago