ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 113-வது பிறந்த நாள் விழா மாநிலம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி சிலைகளுக்கு மத்திய மாவட்டச் செயலாளரும், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வேலூர் மாநகர அதிமுக சார்பில் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுக மாநகர மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சி யில், அதிமுக பொருளாளர் எம்.மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அமமுக சார்பில் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அக்கட்சியின் பொருளாளர் அப்புபால் பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தேமுதிக சார்பில் அக்கட்சி நிர்வாகிகள் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல, காட்பாடி, குடியாத் தம், பேரணாம்பட்டு, அணைக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் அண்ணா பிறந்த நாளையொட்டி திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.
திருப்பத்தூர் மற்றும் ராணிப் பேட்டை மாவட்டங்களில் அண்ணாவின் உருவச்சிலை மற்றும் உருவப் படத்துக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago