கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும்,மாவட்ட ஆட்சியருமான கி.பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பின் விவரம்:
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட செப் 13-ம்தேதி முதல் தேர்தல்நடத்தை விதிமுறைகள் காலிப் பதவியிடங்களுக்கான தற்செயல் தேர்தல் நடைபெறும் இடங்களில் அமலுக்கு வந்துள்ளது. அதன் படி இன்று (செப். 15) முதல் வரும் 22-ம் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் நடைபெறும். 23-ம் தேதி மனு பரிசீலனை நடைபெறும். 25-ம்தேதி வேட்புமனு திரும்ப பெறலாம்.
அக்டோபர் 9 மற்றும் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அக்டோபர் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல்: பண்ருட்டி 2 வது வார்டு, குமராட்சி19வது வார்டு, மேல்புவனகிரி 11வது வார்டு, விருத்தாச்சலம்7வது வார்டு, முஷ்ணம்10வது வார்டு, சிற்றூராட்சி தலைவர் தேர்தல்: அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம், பத்திரக்கோட்டை, கீழ்அருங்குணம், சன்னியாசிப்பேட்டை, பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம் மணம்தவிழ்ந்தபுத்தூர்,
காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியம் நத்தமலை, மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியம் தில்லைநாயகபுரம், விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றியம் நறுமணம், நல்லூர் ஊராட்சி ஒன்றியம் சாத்தியம், முஷ்ணம் ஊராட்சிஒன்றியம் கார்மாங்குடி. பேரூர், சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல்:கீழ் குமாரமங்கலம், பச்சையாங்குப்பம், வெள்ளப்பாக்கம், விலங்கல்பட்டு,கரும்பூர், மேலிருப்பு, பேர்பெரியாங்குப்பம் (வார்டு 4),பேர்பெரியாங்குப்பம் (வார்டு-11), வாண்டியாம்பள்ளம், வழுதலப்பட்டு, அழிஞ்சிமங்கலம்,எள்ளேரி, தேவங்குடி, கீரப்பாளையம், உளுத்தூர்,நக்கரவந்தன்குடி, மணிக்கொல்லை, எம்.அகரம், முதனை, உய்யகொண்டராவி, ஐவதக்குடி, மன்னம்பாடி, வெண்கரும்பூர், மருதத்தூர்,ஆக்கனூர், கொரக்கவாடி, நாவலூர், பனையந்தூர்,ராமநத்தம்,தொழுதூர், நெடுஞ்சேரி, ஆதிவராகநல்லூர், பாளையங்கோட்டை மேல்பாதி ஆகிய தேர்தல் நடைபெறும் இடங்களில் நடத்தை விதிமுறைகளை தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தலுக்கான நடைமுறை முடியும் வரை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago