காளையார்கோவிலில் பட்டப்பகலில் - 150 பவுன் நகைகள் கொள்ளை :

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம் காளை யார்கோவிலில் நேற்று பட்டப் பகலில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 150 பவுன் நகைகள், ரூ.6 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

காளையார்கோவில் மின் வாரிய அலுவலகம் அருகே வசந்த் நகரைச் சேர்ந்தவர் ஜேசுராஜ் (45). இவர் கள்ளிவயல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது மனைவி ஆரோக்கிய ரோஸி வெற்றியூர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். மகள் வெளியூரில் தங்கி படிக்கிறார்.

நேற்று காலை 9 மணிக்கு கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்குச் சென்றனர். மாலை 5 மணிக்கு வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 150 பவுன் நகைகள், ரூ.6 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன.

இதையடுத்து செந்தில்குமார் எஸ்பி, டிஎஸ்பி பால்பாண்டி, காளையார்கோவில் இன்ஸ் பெக்டர் பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித் தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறு கையில், ‘இருவரும் ஆசிரி யர்கள் என்பதால் வீட்டை பூட்டிவிட்டு பணிக்குச் செல்கின் றனர். மேலும் செப்.13-ம் தேதி வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்துள்ளனர். இதை நோட்டமிட்டு கொள்ளையடித்திருக்கலாம். மேலும் பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடப்பதால் அவசர, அவசரமாக நகை, பணத்தை தேடியுள்ளனர்,’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்