பிஎல்என்எல் எம்ப்ளாயீஸ் யூனியன், பிஎஸ்என்எல் ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர்கள் சங்கக் கூட்டமைப்பு ஆகியன இணைந்து திருச்சி பிஎஸ்என்எல் பொது மோலாளர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதைக் கைவிட வேண்டும். பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு 3-வது ஊதிய மாற்ற பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பிஎல்என்எல் எம்ப்ளாயீஸ் யூனியன் திருச்சி மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல்இயு மாவட்டச் செயலாளர் சுந்தர்ராஜ், முன்னாள் மாவட்டச் செயலாளர் தேவராஜ், பிஎஸ்என்எல் ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினர் சின்னையன், தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் முபாரக்அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago