9 ஒன்றியங்களில் 2,069 இடங்களுக்கு நேரடி தேர்தல் : நெல்லை மாவட்ட ஆட்சியர் தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் 2,069 இடங்களுக்கு நேரடி தேர்தல் நடைபெறவுள்ளது என்று, மாவட்ட ஆட்சியர்வே.விஷ்ணு தெரிவித்தார்.

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு ள்ள 24 மணி நேர சிறப்பு தேர்தல் கட்டுப்பாட்டு கண்காணிப்பு அறையை திறந்து வைத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணை யம் மூலம் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (செப்.15) தொடங்குகிறது. முதல் கட்டமாக அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூர், பாளையங்கோட்டை மற்றும் பாப்பாக்குடி ஆகிய 5 ஒன்றியங்களுக்கு வாக்குப்பதிவு அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும். 2-ம் கட்டமாக களக்காடு, நாங்குநேரி, ராதாபுரம் மற்றும் வள்ளியூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப்பதிவு அக்டோபர் 9-ம் தேதி நடைபெறும். காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை பொதுமக்களும், மாலை 5 மணி முதல் 6 மணிவரை கரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களும் வாக்களிக்கலாம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் - 12 இடங்களுக்கும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல் - 122 இடங்களுக்கும், கிராம ஊராட்சி தலைவர் தேர்தல் - 204 இடங்களுக்கும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் - 1,731 இடங்களுக்கும் என, 9 ஊராட்சி ஒன்றியங்களில் 2,069 இடங்களுக்கு நேரடி தேர்தல் நடைபெற உள்ளது.

மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் - 1 பதவியிடம், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தேர்தல் - 1 பதவியிடம், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் - 9 பதவியிடங்கள், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் தேர்தல் - 9 பதவியிடங்கள், கிராம ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் - 204 பதவியிடங்கள் என்று, 9 ஊராட்சி ஒன்றியங்களில் 224 இடங்களுக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 1,188 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 30 ஆண் வாக்குச்சாவடிகள், 30 பெண் வாக்குச்சாவடிகள் மற்றும் 1,128 அனைத்து வாக்காளர் வாக்குச்சாவடிகளாகும். 9 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 6,73,868 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3,30,487, பெண் வாக்காளர்கள் 3,43,325 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 56 வாக்காளர்கள் உள்ளனர்.

மாவட்டத்தில் 333 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப் பட்டுள்ளன. இவற்றுக்கு போதுமான காவல்துறை பாது காப்பு, வீடியோ பதிவுகள் மற்றும் நுண் தேர்தல் மேற்பார் வையாளர்கள் , இணையதள கண்காணிப்பு போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 20 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் 277 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிமுறை களை கண்காணிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு கண்காணிப்பு அறை தொடங்கப் பட்டுள்ளது. தேர்தல் விதிமீறல் தொடர்பாக கட்டுப்பாட்டு அறை எண் 74026 08438 மற்றும் 1800 425 8373 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று தெரிவித்தார்.

மாவட்ட காவல் கண்காணிப் பாளர் மணிவண்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

உள்ளாட்சித் தேர்தலில் 3,700 போலீஸார் பாதுகாப்பு

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை அமைதியாகவும், அசம்பாவிதங்கள் இல்லாமலும் நடத்த தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். முதற்கட்ட தேர்தல் நடைபெறவுள்ள 5 ஊராட்சி ஒன்றியங்களில் 2 ஆயிரம் போலீஸாரும், 2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் 4 ஊராட்சி ஒன்றியங்களில் 1,700 போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்