திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழுவில் எம்எல்ஏ நியமனம் :

By செய்திப்பிரிவு

திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழுவின் உறுப் பினராக அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் நியமிக்கப் பட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்களின் ஆட்சி மன்ற குழுவின் உறுப்பினர்களாக சட்டப் பேரவை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் ஆட்சிமன்ற குழுவின் உறுப்பினராக அணைக்கட்டு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் நிய மிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் ஆட்சிமன்ற குழுவின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து பெற்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்