காலமுறை ஊதியம் வழங்கக் கோரி - உள்ளாட்சி துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

ஊராட்சி மேல்நிலை குடிநீர்த் தொட்டி ஆபரேட்டர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் (சிஐடியூ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் ஆட்சியர் அலு வலகம் முன் நடந்த ஆர்ப்பாட் டத்துக்கு மாவட்டச் செயலாளர் அய்யாத்துரை தலைமை வகித் தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் கணேசமூர்த்தி முன்னிலை வகித்தார். குடிநீர்த் தொட்டி ஆபரேட்டர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்குதல், ஊதிய உயர்வுக்கான அரசாணையை திருத்தி அகவிலைப்படியுடன் வெளியிடுதல், பணி ஓய்வுக்குப் பின் பணிக்கொடை, ஓய்வூதியம், தூய்மைக்காவலர்களுக்கு ஊராட்சி மூலம் நேரடியாக சம் பளம் உள்பட கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டன.

மதுரை

மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவர் கே.தங்க வேல்பாண்டியன் தலைமை வகித்தார். உள்ளாட்சி சம்மேளன மாநில துணைத்தலைவர் பாலசுப்ரமணியன், சிஐடியூ கண்ணன், மாவட்டச் செய லாளர் அரவிந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். செயலாளர் கணேசன், பொருளாளர் ராணி முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்