பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் சின்ன வெங்காயம் வணிக வளாகத்தில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சின்ன வெங்காய ஏலம் நடைபெற உள்ளது. அதன்படி, இன்று (செப்.14) நடைபெறும் ஏலத்தில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சின்ன வெங்காயம் பயிரிடும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த சின்ன வெங்காயத்தை கொண்டு வந்து விற்று பயன்பெறலாம். சின்ன வெங்காயத்தை சேமித்து வைக்கவும், வெங்காயத்தில் இருந்து தாள்களை நீக்கி சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ளவும் விவசாயிகள் வெங்காய வணிக வளாகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) சிங்காரம் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago