திருவண்ணாமலை மாவட்டத்தில் - தடுப்பூசி செலுத்திக்கொண்ட அனைவருக்கும் ஆட்சியர் நன்றி :

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,04,325 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதற்காக அனை வருக்கும் ஆட்சியர் பா.முருகேஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தி.மலை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி 1,004 முகாம்களில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த முகாம்கள் மூலமாக 1,04,325 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆர்வத்துடன் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பொது மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, சட்டப் பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவத் துறையை சார்ந்த அனைத்து நிலை பணியா ளர்கள், வருவாய்த் துறையினர், ஊரக வளர்ச்சி துறை மற்றும் நகராட்சி, பேரூராட்சி துறை யினர், காவல்துறையினர், அரசு அலுவலர்கள் மற்றும் பணி யாளர்கள், உள்ளூர் முக்கிய பிரமுகர்கள், பள்ளி ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், தூய்மை பணியா ளர்கள், நியாய விலைக் கடை விற்பனையாளர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் மன மார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது, அரசிடம் இருந்து கூடுதலாக தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளன. சிறப்பு முகாம் களில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்காக அடுத்த 3 நாட்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இந்த வாய்ப்பை பொது மக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள் கிறேன். ஆர்வத்துடன் தடுப்பூசி இயக்கத்தில் மக்கள் பங்கேற்றால், நமது தி.மலை மாவட்டத்தில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டது என்ற நிலையை விரைவில் அடைவோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்வதாக” தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE