தி.மலை மாவட்டத்தில் உள்ள பொழுது போக்கு பூங்காக்கள், அணைகள் மற்றும் நீச்சல் குளங் களுக்கு மக்கள் செல்வதற்கான தடை, மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்க அணைகள், பூங்காக்கள் மற்றும் நீச்சல் குளங்கள் ஆகியவை கடந்த ஒரு மாதமாக மூடப்பட்டுள்ளன. செப்டம்பர் 12-ம் தேதியுடன் முடிவுற்ற தடை உத்தரவு, மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்தப் பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுது போக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள் மற்றும் அணை களுக்கு பொதுமக்கள் செல்ல ஏற்கெனவே கடந்த 12-ம் தேதி வரை விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு, வரும் 19-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, மக்கள் அனைவரும் தவறாமல் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago