மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,529 கனஅடியானது :

By செய்திப்பிரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10 ஆயிரத்து 529 கனஅடியானது.

கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காரணமாக மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர்வரத்து உள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 10 ஆயிரத்து 510 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 10 ஆயிரத்து 529 கனஅடியானது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 750 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 76.18 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று 76.09 அடியானது. நீர் இருப்பு 38.17 டிஎம்சி-யாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்