திருச்சி மாவட்டத்தில் தகுதியான அனைவருக்கும் விரைவில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என மாநில நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 1,37,500 பேருக்கு நேற்று கரோனா தடுப் பூசி இடும் நோக்கில், மாநகரில் 126 இடங்கள், ஊரகப் பகுதியில் 497 இடங்கள் என மொத்தம் 623 இடங் களில் கரோனா தடுப்பூசி இடும் முகாம் அமைக்கப்பட்டிருந்தது.
திருச்சி கிஆபெ விசுவநாதம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை மாநில நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வை யிட்டு, ஆய்வு செய்தார்.
அப்போது, அவர் செய்தியாளர் களிடம் கூறியது: திருச்சி மாநக ரில் தகுதியான 7.50 லட்சம் பேரில் ஏற்கெனவே 4.10 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி இடப் பட்டுள்ளது. எஞ்சிய 3.40 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி இடும் பணி தொடர்ந்து நடை பெறும். திருச்சி மாவட்டத்தில் அனைவருக் கும் விரைவில் கரோனா தடுப் பூசி செலுத்தப்பட்டுவிடும் என்றார்.
ஆட்சியர் சு.சிவராசு கூறும் போது, “கரோனா தடுப்பூசி இடுவ தில் மாநிலத்தில் 5-வது இடத்தில் திருச்சி மாவட்டம் உள்ளது. மாவட்டத்தில் தகுதியான 22.80 லட்சம் பேரில் ஏற்கெனவே 11 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி இட்டுள்ள நிலையில், 13 லட்சம் பேருக்கு இட வேண்டியுள்ளது” என்றார்.
இதேபோல, மாநகராட்சிக்குட் பட்ட காட்டூர் பாப்பாகுறிச்சி புனித பிலோமினாள் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை, மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.
கரோனா தடுப்பூசி முகாமை கண்காணிப்பதற்காக திருச்சி மாவட்டத்துக்கு நியமனம் செய்யப் பட்டுள்ள மாவட்ட கண்காணிப் பாளரும், அருங்காட்சியக இயக் குநருமான எஸ்.ஏ.ராமன், சுப்பி ரமணியபுரம் மாநகராட்சி நடுநி லைப் பள்ளி, திருவெறும்பூர் ஒன்றியத்துக்குட்பட்ட குண்டூர் மினி கிளினிக் ஆகிய இடங்களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின்போது, ஆட்சியர் சு.சிவராசு, மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான், நகராட்சி நிர்வாக இயக்கக மேற்பார்வை பொறியாளர் திருமாவளவன், நலப் பணிகள் இணை இயக்குநர் சு.லட்சுமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஆ.சுப்பிரமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago