நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் - 27 மையங்களில் நீட் தேர்வு: மாணவர்கள் ஆர்வம் :

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் 17 மையங்கள், தென்காசி மாவட்டத்தில் 3 மையங்கள், கன்னியாகுமரி மாவட்டத்தில் 7 மையங்கள் என, மொத்தம் 27 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. தேர்வு மையங்களுக்கு சிறப்பு பேருந்து கள் இயக்கப்பட்டன. மதியம் தொடங்கிய தேர்வுக்கு காலையில் இருந்தே தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் திரண்டனர்.

தனிமனித இடைவெளியுடன் நிற்பதற்கு தேர்வு மையங்களுக்கு வெளியே வட்டங்கள் வரையப்பட்டிருந்தன. தேர்வு மையத்துக்கு வெளியே தேர்வு அறைக்கு செல்லும் வழி குறித்த வரைபடம் வைக்கப்பட்டிருந்தது. தேர்வு மையங்களுக்கு செல்லும் முன் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. உடல் வெப்பநிலை அதிகமாக உள்ளவர்களுக்கு தனி அறையில் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்வர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வைத்திருந்த மாணவ, மாணவிகள் மட்டும் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடந்த ஆண்டைப்போலவே மாணவ, மாணவிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பெற்றோர்கள் தேர்வு மையத்துக்கு வெளியே காத்திருந்தனர். நீட் தேர்வு எழுத 6 ஆயிரத்து 997 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 6,719 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். 278 பேர் தேர்வு எழுத வரவில்லை.

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 7 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. அஞ்சுகிராமம் அருகே பால்குளம் ரோகிணி பொறியியல் கல்லூரி, சுங்காங்கடை புனித சேவியர் கத்தோலிக்க கல்லூரி, வின்ஸ் பொறியியல் கல்லூரி, இறச்சகுளம் அமிர்தா பொறியியல் கல்லூரி, ஒழுகினசேரி ராஜாஸ் இன்டர்நேஷனல் பள்ளி, தோவாளை லயோலா பொறியியல் கல்லூரி, ஆரல்வாய்மொழி டி.எம்.ஐ. பொறியியல் கல்லூரி ஆகிய 7 மையங்களில் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது.

இந்த மையங்களில் தேர்வு எழுத 4,142 மாணவ, மாணவியர் விண்ணப்பித்திருந்தனர். 215 பேர் வரவில்லை. 3,927 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 1,163 பேர், மாணவிகள் 2,764 பேர். மாணவ, மாணவியர் பெற்றோர்க ளுடன் தேர்வு மையத்துக்கு வந்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்