பட்டாசு கடை உரிமத்துக்கு விண்ணப்பிக்கலாம் : தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

பட்டாசு விற்பனைக்கு தற்காலிக உரிமம் கோருபவர்கள் வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனைக்காக தற்காலிக கடை உரிமம் கோருபவர்கள், வரும் 30-ம் தேதிக்குள் இ-சேவை மையங்கள் மூலமாக ‘ஆன்லைனில்’ மட்டுமே விண்ணபிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது இணைக் கப்பட வேண்டிய ஆவணங்கள் குறித்த விவரம்–கடை அமை விடத்துக்கான சாலை வசதி, கொள்ளளவு, சுற்றுப் புறங்களை குறிக்கும் வரைபடம் மற்றும் கட்டிடத்துக்கான நீல வரைபடம் –6 நகல்கள்.

கடை வைக்க உத்தேசிக்கப் பட்டுள்ள இடம், சொந்த கட்டிடமாக இருந்தால், அதற்கான ஆவணம் அல்லது வாடகை கட்டிடமாக இருந்தால் ரூ.20-க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்த பத்திரம். தற்காலிக உரிமத்துக்கான கட்டணம் ரூ.600-ஐ, எஸ்பிஐ வங்கி மூலம் அரசு கணக்கில் செலுத்தப்பட்டதற்கான அசல் சலான்.

இருப்பிடத்துக்கான ஆதாரம் – ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை. தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனை உரிமம் கோரும் கட்டிடத்துக்கான சொத்து வரி ரசீது. தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனைக்கான உரிமம் கோரும் விண்ணப்பதாரரின் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை இணைத்து வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு அனுப்பப் படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும், நிரந்தர பட்டாசு சில்லறை விற்பனை உரிமம் கோருபவர் மற்றும் வருடாந்திர உரிமம் புதுப்பிக்க, இந்த வழிமுறை பொருந்தாது’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்