ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் - 8,280 மாணவர்கள் ‘நீட்' தேர்வு எழுதினர் : 393 பேர் பங்கேற்கவில்லை

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் 16 மையங்களில் நேற்று நடைபெற்ற ‘நீட்’ தேர்வில் 8,280 மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இது 95.5 சதவீத மாகும்.

மருத்துவப்படிப்பில் சேருவதற் கான ‘நீட்’ நுழைவு தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் தலா 2 மையங்கள், வேலூர் மாவட்டத்தில் 12 மையங்கள் என மொத்தம் 16 மையங்களில் ‘நீட்’ தேர்வு நேற்று நடைபெற்றது.

வேலூர் உட்பட 3 மாவட்டங் களிலும் ‘நீட்’ தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகளுக்கு பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தன. காலை 11 மணி முதல் மாணவ, மாணவிகள் தேர்வு மையத்துக்கு வரத்தொடங்கினர். கரோனா பரவல் காரணமாக தேர்வு மைய நுழைவு வாயிலில் மாணவர்களின் உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்டது.

முகக்கவசம், ஹால் டிக்கெட், தண்ணீர் பாட்டில் ஆகியவை எடுத்துச்செல்ல அனுமதிக்கப் பட்டது.

தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளதா? என மாணவர்களிடம் பரிசோதனைகள் செய்யப்பட்டன. காலை 11 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக் கப்பட்டனர்.

வேலூர் மாவட்டத்தில் வேலூர் விஐடி பல்கலைக்கழகம், சிருஷ்டி மெட்ரிக் பள்ளி, சன்பீம் மெட்ரிக் பள்ளி, அரியூர் ஸ்பார்க்,  நாராயணி பீடம், சாயிநாதபுரம் கிருஷ்ணசாமி மேல்நிலைப்பள்ளி, வேலூர் டிகேஎம் மகளிர் கல்லூரி, காட்பாடி கிங்ஸ்டன் பள்ளி உள்ளிட்ட 12 மையங்களில் ‘நீட்’ தேர்வு நேற்று நடைபெற்றது.

இந்த 12 மையங்களில் தேர்வு எழுத 6,273 மாணவ, மாணவிகளுக்கு ஹால்டிக்கெட் வழங்கப் பட்டிருந்தது. ஆனால், 6,027 மாண வர்கள் மட்டுமே நேற்று தேர்வு எழுத வந்தனர். 246 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 2 மையங்களில் 600 மாணவர்கள் தேர்வு எழுத ஹால் டிக்கெட் வழங்கப்பட்டிருந்த நிலையில், 560 மாணவர்கள் மட்டுமே நேற்று தேர்வு எழுத வந்தனர். 40 மாணவர்கள் தேர்வு எழுதவரவில்லை.

அதேபோல, திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி மற்றும் ஏலகிரி மலை டான்போஸ்கோ கல்லூரி என 2 மையங்களில் 1,800 மாணவர்கள் தேர்வு எழுத ஹால்டிக்கெட் வழங் கப்பட்டிருந்த நிலையில், அங்கு 1,693 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத வந்தனர். 107 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 8,673 மாணவர்கள் தேர்வு எழுத அழைக்கப்பட்டிருந்த நிலையில், 8,280 மாணவர்கள் மட்டுமே நேற்று நடைபெற்ற ‘நீட்’ தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இது 95.5 சதவீதமாகும். 393 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. இது 4.5 சதவீதமாகும். ஒவ்வொரு மையத்திலும் ஒரு உதவி காவல் ஆய்வாளர் தலைமையில் பெண் காவலர் உட்பட 7 காவலர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.

பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 5 மணிக்கு முடிவுற்றது. ஆங்கிலம் மற்றும் இந்தி மொழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருப்பு, வெள்ளை நிறத்தில் வினாத் தாள்கள் வழங்கப்பட்டன. தமிழ் மொழில் தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு பச்சை நிறத்தில் வினாத்தாள் வழங்கப்பட்டன.

3 மாவட்டங்களில் நடைபெற்ற ‘நீட்’ தேர்வை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், சார் ஆட்சியர்கள் உள்ளிட்ட அதி காரிகள் நேரில் ஆய்வு செய்து மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ‘நீட்’ ஒருங்கிணைப் பாளரும், சிருஷ்டி பள்ளி முதல் வருமான சரவணன் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ‘நீட்’ தேர்வு மையங்களை நேரில் ஆய்வு செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்